• February 26, 2022

Career Guidance & Counselling reg.

Career Guidance & Counselling reg.

அனைவருக்கும் வணக்கம்,
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு ,

அரசு / சென்னை/ஆதி திராவிட நல மேல் நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு உயர்கல்வி கற்றல் சார்ந்த வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் (Career Guidance & Counselling) சிறப்புத் திட்ட துவக்க விழாவானது 01.03.2022 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்விழா நிகழ்ச்சி 01-03-2022 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1.00 மணிவரை நடைபெறும் நேரலை நிகழ்வினை பள்ளிகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள (PROJECTORS), ஸ்மார்ட் வகுப்பறைகள் (SMART CLASSROOMS), உயர்தொழில்நுட்ப ஆய்வகம் (HI-TECH LAB), LCD/LED திரைகள், MOBILE PHONE ஆகியவற்றை பயன்படுத்தி 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் பார்வையிட செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்
நேரலைக்கான LINK 28-02-2022 அன்று பள்ளிகளுக்கு மினனஞ்சல் மூலம் அனுப்பப்படும்
மேலும் இந்நிகழ்வினை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறிந்துகொள்ள ஏதுவாக அனைத்து பள்ளிகளிலும் 6 X 4 அளவில் பதாகை (BANNER SIZE 6X4) வைக்கவும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர்கள் இந்நிகழ்வினை பார்வையிடுதலை (காணொளி / புகைப்படம்) ஆவணப்படுத்தி மாவட்டக் கல்வி அலுவகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
சென்னை மாவட்டம்

Career Guidance & Counselling   (download link)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *